UPDATED : ஏப் 20, 2026 11:00 PM
ADDED : ஏப் 20, 2026 11:01 PM
'தினமலர்' நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லுாரி இணைந்து நடத்திய, 'நீட்' மாதிரி தேர்வில், கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ராமசுப்பிரமணியன் பேசியதாவது:
நீண்ட நாட்களாக, 'நீட்' தேர்விற்காக உங்களை செதுக்கிக் கொண்டு, மிகச்சிறந்த முறையில் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். இங்கு விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள், உங்களுக்கு எரிச்சலை தரலாம்.
ஆனால், ஒரு சிலரின் தவறான செயல்களால், உங்களின் உழைப்பு வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே, 'நேஷனல் டெஸ்ட் ஏஜன்சி' மற்றும் சி.பி.எஸ்.இ., அமைப்புகள், இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எனவே, தயவு செய்து அவற்றை உங்கள் நலனுக்காக விதிக்கப்பட்ட பாதுகாப்பாக கருதி, முழுமையாக பின்பற்றுங்கள்.
தற்போது நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை மதிப்பிடும் ஒரு களம் இது. பொதுவாக, நாம் ஒரு தேர்வை எழுதியவுடன், எல்லாம் முடிந்துவிட்டது என நினைப்போம்.
ஆனால், உண்மையான பயணம் இனிமேல் தான் தொடங்குகிறது. ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களை போன்ற உயர் கல்வி அமைப்புகள், உங்களை போன்ற திறமையான மாணவர்களின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
