UPDATED : பிப் 06, 2025 12:00 AM
ADDED : பிப் 06, 2025 11:43 AM
சாம்ராஜ் நகர்:
கல்வி சுற்றுலாவின்போது, பஸ்சை ஓட்டிய பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சாம்ராஜ் நகர் மாவட்டம், எலந்துாரின் கும்பள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மாணவர்கள், ஆங்கில புத்தாண்டை ஒட்டி கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் ஆசிரியர் வீரபத்ரேசாமி உள்ளிட்டோர் பாதுகாப்பாக சென்றனர்.ஹாசனின் பேலுார், ஹளேபீடு ஆகிய பகுதிகளுக்கு பஸ்சில் மாணவர்கள் சென்றனர்.
மாணவர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக, சிறிது துாரம் பஸ்சை ஆசிரியர் வீரபத்ரேசாமி ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுதொடர்பாக பொதுக்கல்வி துணை இயக்குநர் ராமசந்திர ராஜே அர்சிடம், எலந்துார் மண்டல கல்வி அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், ஆசிரியர் வீரபத்ரசாமியை சஸ்பெண்ட் செய்த பொதுக்கல்வி துணை இயக்குநர், துறைரீதியில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.