தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜினியரிங் படிப்பில் சேர மாநில பாடத்திட்டமே சிறந்தது

இன்ஜினியரிங் படிப்பில் சேர மாநில பாடத்திட்டமே சிறந்தது

இன்ஜினியரிங் படிப்பில் சேர மாநில பாடத்திட்டமே சிறந்தது


UPDATED : ஜூலை 13, 2026 03:12 PM

ADDED : ஜூலை 13, 2026 03:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2026 03:12 PM ADDED : ஜூலை 13, 2026 03:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:

இந்தாண்டு, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'கட் - ஆப்'பில், 2 மதிப்பெண்கள் குறையும். ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில், தொழில்நுட்ப படிப்புகளை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதில் தவறில்லை.

அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் இன்ஜினியரிங் பயில விரும்புவோர், மாநில பாடத்திட்டத்தில் படிப்பதே சிறந்தது. அவர்களின் மதிப்பெண்ணுக்கு தான் அதிக கட் - ஆப் கிடைக்கும்.

ஒரே பெயரில் பல கல்லுாரிகள் இருக்கும். எனவே, கவுன்சிலிங்கில் பங்கேற்கும் முன், விரும்பும் கல்லுாரிகள், அவற்றின் குறியீட்டு எண்கள், தரவரிசை, படிப்புகள் உள்ளிட்டவற்றை தனியே வரிசைப்படுத்தி எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை, 'சாய்ஸ் பில்லிங்'கின் போது குறிப்பிட வேண்டும்.

இ - வாகனம், ரோபோட்டிக் உள்ளிட்ட பல துறைகளுக்கு, ஒருங்கிணைந்த இன்ஜி., படிப்புடன் புதிய தொழில்நுட்ப அறிவும் தேவை. அதனால், 'பிளக்ஸிபிள் கோர்ஸ்' வசதி உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்வது நல்லது. கல்லுாரிக்கு சென்று விசாரியுங்கள். 'யூ டியூபர்'களின் ஆலோசனைகளை கேட்காதீர்கள்; அவர்களில் பலர் மோசடிக்காரர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us