UPDATED : ஜன 10, 2025 12:00 AM
ADDED : ஜன 10, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான நயமக்காடு எஸ்டேட், ராஜமலை டிவிஷனை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் ஆனந்தராஜ், ஜெயராணி. இவர்களின் மகள் ஜான்சி ராணி தேவிகுளம் அரசு தமிழ் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
திருவனந்தபுரத்தில் பள்ளிகளுக்கு மாநில அளவில் பள்ளி கலைவிழா போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் பங்கேற்ற ஜான்சிராணி தமிழ் வழி செய்யுள் ஒப்புவித்தல் போட்டியில் ஏ கிரேடு பெற்று அசத்தினார். அவருக்கு கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.