தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ வகுப்பறை கட்டடம் இல்லை மாணவர்கள் சாலை மறியல்

வகுப்பறை கட்டடம் இல்லை மாணவர்கள் சாலை மறியல்

வகுப்பறை கட்டடம் இல்லை மாணவர்கள் சாலை மறியல்


UPDATED : அக் 31, 2024 12:00 AM

ADDED : அக் 31, 2024 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2024 12:00 AM ADDED : அக் 31, 2024 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பத்துார்:
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பஞ்., உட்பட்ட ராமசந்திரபுரத்திலுள்ள அரசு துவக்கப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

வகுப்பறை கட்டடம் சேதமானதால், 6 மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. புதிய வகுப்பறை இதுவரை கட்டாததால், மாணவ - மாணவியர் திறந்தவெளியில், மழை காலங்களில் சேரும் சகதியுமான இடத்தில் அமர்ந்து படிக்கின்றனர்.

இதில் ஆத்திரமடைந்த மாணவ - மாணவியர், புதிய வகுப்பறை கட்டடம் கட்டி தரக்கோரி, நேற்று ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவியவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். ஆத்திரமடைந்த பெற்றோரும் மறியலில் ஈடுபட்டனர்.

மாதனுார் பி.டி.ஓ., மணவாளன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என, சமாதானப்படுத்திய பின், மறியல் கைவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us