தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உண்மை தன்மை சான்றுக்கு இனி கட்டணம் இல்லை

உண்மை தன்மை சான்றுக்கு இனி கட்டணம் இல்லை

உண்மை தன்மை சான்றுக்கு இனி கட்டணம் இல்லை


UPDATED : நவ 04, 2024 12:00 AM

ADDED : நவ 04, 2024 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2024 12:00 AM ADDED : நவ 04, 2024 03:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
பட்டப்படிப்பு சான்றிதழ்கள் குறித்த உண்மை தன்மை சான்று வழங்க, பல்கலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

பட்டப்படிப்பு முடித்தவர்கள், அரசு பணிகளில் நியமிக்கப்படும் போது, அவர்களின் கல்வி தகுதிக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். அக்கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து அறிய அரசு ஏற்பாடு செய்யும்.

இதற்காக, அச்சான்றை வழங்கிய பல்கலைகள், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அதை அனுப்பி, அதன் உண்மை தன்மை குறித்த அறிக்கை பெறுவர். இதற்காக, 1,000 ரூபாய் முதல் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், உண்மை தன்மை சான்று வழங்க பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் கட்டணம் பெறக்கூடாது என, யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோசி உத்தரவிட்டுள்ளார். அதில், உயர் கல்வி நிறுவனங்கள் விருப்பப்படி, அசிஸ்டென்ட் செக்சன் ஆபீசர், ஸ்டாப் செலக்சன் கமிஷன் பணிகளுக்கு, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us