பிஸ்கட்டில் திருக்குறள்: பிரிட்டானியா மில்க் பிகிஸின் புதிய முயற்சி!
பிஸ்கட்டில் திருக்குறள்: பிரிட்டானியா மில்க் பிகிஸின் புதிய முயற்சி!
UPDATED : ஜூலை 11, 2026 04:03 PM
ADDED : ஜூலை 11, 2026 04:04 PM

சென்னை:
மில்க் பிகிஸ் நிறுவனம், 'மில்க் பிகிஸ் திருக்குறள் சேலஞ்ச்' என்ற புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
2000 ஆண்டுகளை கடந்தும், வாழ்வியலோடு கலந்து வழிகாட்டும் நூல் 'திருக்குறள்'. இந்த குறள்களை இன்றைய நவீன தலைமுறையினருக்கு, அவர்களுக்குப் பிடித்தமான பாணியில் கொண்டு சேர்க்க மில்க் பிக்கீஸ் நிறுவனம் ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது.
தினசரி நாம் சாப்பிடும் சாதாரண பிஸ்கட்டை, திருக்குறளைக் கண்டறியும் ஒரு விளையாட்டாக மாற்றியுள்ளனர். இதன் மூலம், இணைய உலகிலேயே வாழும் இன்றைய தலைமுறையினர், தமிழ் கலாச்சாரத்தின் சிறந்த நூலான திருக்குறளை மிகவும் எளிமையாகவும், தங்களுக்குப் பரிச்சயமான விளையாட்டு வடிவிலும் அணுகலாம்.
மேலும், பிஸ்கட் மீது திருக்குறளின் வார்த்தைகள் அச்சிடப்பட்டிருப்பது எளிதாகத் தோன்றலாம். ஆனால், இந்த எளிய யோசனைக்கு பின்னால் ஒரு குழுவின் கடின உழைப்பு இருக்கிறது. கலாச்சாரத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில், வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்தித் துறையினர் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.
தமிழ் எழுத்துக்களில் ஒரு சிறிய புள்ளியோ அல்லது துணைக்காலோ மாறினால் கூட வார்த்தையின் அர்த்தமே மாறிவிடும் என்பதால், ஒவ்வொரு தமிழ் எழுத்தும் மிக கவனமாக பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைய தலைமுறையினர் இடையே இது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
