புதுச்சேரி தமிழ் சங்கத்தில் திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
UPDATED : நவ 21, 2026 04:44 AM
ADDED : நவ 21, 2026 04:44 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
புதுச்சேரி தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் நடக்கிறது.
இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி நடந்தது. தமிழ் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனுமோகன்தாஸ் வரவேற்றார். செல்வகணபதி எம்.பி., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, பள்ளி மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கினார்.
பொருளாளர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
