தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருத்தணி குறுவட்ட தடகள போட்டி 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்பு

திருத்தணி குறுவட்ட தடகள போட்டி 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்பு

திருத்தணி குறுவட்ட தடகள போட்டி 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்பு


UPDATED : ஆக 06, 2026 06:25 PM

ADDED : ஆக 06, 2026 06:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 06:25 PM ADDED : ஆக 06, 2026 06:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:
திருத்தணி ஜி.ஆர்.டி., பொறியல் கல்லுாரியில் நடந்த குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், தடகள போட்டிகள் நடந்தன. இதில், 1000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றிய அரசு பள்ளி மாணவ, மாணவியர் இடையே, குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று, குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் தொடங்கின. இதன் தொடக்க விழாவில், தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, ஜி.ஆர்.டி., பொறியியல் கல்லுாரியின் முதல்வர் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று, தடகளப் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

இதில், 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான, 3,000 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் நடந்தது. மேலும், குண்டு, ஈட்டி எரிதல், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஜி.ஆர்.டி., பொறியியல் கல்லுாரி முதல்வர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா ஆகியோர் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றுகள் வழங்கினர்.

இந்த போட்டியில், 1,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us