பாரதியார் பல்கலைக்கு நிலம் அளித்தவர்கள் போராட முடிவு
பாரதியார் பல்கலைக்கு நிலம் அளித்தவர்கள் போராட முடிவு
UPDATED : ஜூலை 14, 2025 12:00 AM
ADDED : ஜூலை 14, 2025 09:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி:
நவாவூரில், பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தவர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், நவாவூரில் உள்ள, கோவில் மைதானத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில், பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்து, 43 ஆண்டுகளாகியும் அரசு முழு தொகையையும் வழங்கவில்லை. இது தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் அரசு பின்பற்றவில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நிலம் கொடுத்தவர்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை. எனவே, வரும் ஆக., 4ம் தேதி, கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும், அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் போராட்டங்கள் நடத்துவது என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.