மும்மொழி கொள்கை ஒற்றுமையை சிதைக்கும்: தமிழக காங்கிரஸ் கண்டனம்
மும்மொழி கொள்கை ஒற்றுமையை சிதைக்கும்: தமிழக காங்கிரஸ் கண்டனம்
UPDATED : ஜூலை 06, 2026 10:03 AM
ADDED : ஜூலை 06, 2026 10:03 AM
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை:
மாநில அரசுகளிடம் ஆலோசிக்காமல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் கட்டாயம் என மோடி அரசு அறிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையாலும், பெரும் அழுத்தத்தை தராத மாநில பாடத்திட்டத்தாலும் தான், சமூக, பொருளாதார ரீதியாக தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆனால், தங்கள் குறுகிய அரசியல் காரணங்களுக்காக, ஹிந்தி, சமஸ்கிருதத்தை இந்தியாவின் மொழியாக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் ஆபத்தான விளையாட்டை, மோடி அரசு தொடங்கியிருக்கிறது.
மும்மொழி கொள்கை என்பது மிக மிக ஆபத்தானது. அது, மாணவர்களை பாதிப்பதோடு, இந்தியாவின் ஒற்றுமை, சமூக நீதி, மதச்சார்பின்மை கொள்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்; இந்தியாவின் ஒற்றுமையையும் சிதைக்கும்.
எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் கட்டாயம் என்ற அறிவிப்பை, மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். பள்ளிக் கல்வியை, 100 சதவீதம் மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
