சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறார்கள் தப்பியோட்டம்
சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறார்கள் தப்பியோட்டம்
UPDATED : டிச 26, 2025 10:26 AM
ADDED : டிச 26, 2025 10:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறார்கள் தப்பியோடிது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு 3 சிறார்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார், தப்பிய 3 சிறுவர்களையும் தேடி வந்தனர். இந்நிலையில், வில்லியனுார் புறவழிச்சாலையில் இரவு 2:30 மணிக்கு 2 சிறுவர்களை போலீசார் பிடித்து, அரியாங்குப்பம், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 3 சிறுவர்கள் தப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

