UPDATED : ஆக 18, 2026 01:12 PM
ADDED : ஆக 18, 2026 01:14 PM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ மாணவியருக்கான பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், தமிழகம் முழுதும் நடந்து வருகின்றன.
இதன் சென்னை மாவட்டத்திற்கான பீச் வாலிபால் போட்டிகள், பெரியமேடு நேரு விளையாட்டரங்கில் நேற்று நிறைவடைந்தன.
இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், சென்னை பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி அணியும் முதலிடம் பிடித்துள்ளன.
அதே போல், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளி அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மூன்று அணிகளும், மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
