பணி நீட்டிப்பு ஆணை வழங்காததால் 3 ஆசிரியர் சம்பளமின்றி தவிப்பு
பணி நீட்டிப்பு ஆணை வழங்காததால் 3 ஆசிரியர் சம்பளமின்றி தவிப்பு
UPDATED : டிச 17, 2025 07:48 AM
ADDED : டிச 17, 2025 07:48 AM
சேலம்:
வாழப்பாடி அருகே அருநுாத்துமலை, ஆலடிப்-பட்டியில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் உறைவிட நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. அங்கு, 151 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், 3 பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு, 3 ஆண்டுக்கு ஒரு-முறை பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படும். அதன்படி தான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அப்பள்ளி யின், 3 ஆசிரியர்களுக்கு, கடந்த ஆகஸ்டில் பணி நீட்டிப்பு காலம் முடிந்-தது. புது ஆணை வழங்கப்படவில்லை. இதனால், 3 மாதங்களாக, 3 ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, ''விரைவில் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி சம்-பள நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுக்-கப்படும்,'' என்றார்.

