sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை பட்டியல்

/

டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை பட்டியல்

டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை பட்டியல்

டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை பட்டியல்


UPDATED : ஜூன் 19, 2025 12:00 AM

ADDED : ஜூன் 19, 2025 02:43 PM

Google News

UPDATED : ஜூன் 19, 2025 12:00 AM ADDED : ஜூன் 19, 2025 02:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
டைம்ஸ் உயர்கல்வி தரவரிசைப்பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 2 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன.

ஐ.நா.,வின் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி பணியாற்றும் 130 நாடுகளைச் சேர்ந்த 2,526 பல்கலைகழகங்கள் குறித்து பிரிட்டனைச் சேர்ந்த டைம்ஸ் இதழ் ஆய்வு நடத்தியது. பருவநிலை மாற்றம், தரமான கல்வி, பாலின சமத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

முதல் 50 இடங்களுக்குள் 2 இந்திய கல்வி நிறுவனங்களும், முதல் 100 இடங்களுக்குள் 4 இந்திய கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. இதில் கோவையில் உள்ள அமிர்த விஸ்வ வித்யபீதம் நிகர்நிலை பல்கலை 41வது இடத்திலும் பஞ்சாபில் உள்ள லவ்லி பல்கலை 48 வது இடத்திலும் உள்ளன.

டைம்ஸ் இதழில் இடம்பிடித்த 15 இந்திய கல்வி நிறுவனங்கள்

1. அமிர்தா விஸ்வா வித்யபீதம் (தமிழகம்)

2. லவ்லி புரோபஷனல் பல்கலை (பஞ்சாப்)

3. ஜேஎஸ்எஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (கர்நாடகா)

4. ஷூலின் பல்கலை (ஹிமாச்சல பிரதேசம்)

5. அண்ணா பல்கலை (தமிழகம்)

6. பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (தமிழகம்)

7. கேஐஐடி பல்கலை (ஒடிஷா)

8. மணிபால் உயர்கல்வி அகாடமி (கர்நாடகா)

9. என்ஐடிடிஇ (கர்நாடகா)

10. செஞ்சூரியன் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலை (ஒடிஷா)

11. சித்காரா பல்கலை (பஞ்சாப்)

12. டாக்டர் டி.ஓய்.பாட்டில் வித்யாபீடம் (புனே)

13. காந்திநகர் ஐஐடி (குஜராத்)

14. மணிபால் பல்கலை (ராஜஸ்தான்)

15. சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் மையம் (தமிழகம்)

15. சிவ நாடார் பல்கலை (உ.பி.,) ஆகியன இடம்பிடித்துள்ளன.







      Dinamalar
      Follow us