தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருச்செங்கோடு எஸ்.பி.கே., பள்ளிகளின் வெள்ளிவிழா, முன்னாள் மாணவர் சந்திப்பு

திருச்செங்கோடு எஸ்.பி.கே., பள்ளிகளின் வெள்ளிவிழா, முன்னாள் மாணவர் சந்திப்பு

திருச்செங்கோடு எஸ்.பி.கே., பள்ளிகளின் வெள்ளிவிழா, முன்னாள் மாணவர் சந்திப்பு


UPDATED : அக் 04, 2026 12:40 PM

ADDED : அக் 04, 2026 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:40 PM ADDED : அக் 04, 2026 12:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்செங்கோடு:
திருச்செங்கோடு, எஸ்.பி.கே., கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா ஆண்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, வேர்கள் என்று கருதப்படும் முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு வணிக, வியாபார நிறுவனங்களுக்கு நினைவு கூறும் விழாவாக நடந்தது.

எஸ்.பி.கே. ஜெம்ஸ் பள்ளிகளின் நிறுவனர் செங்கோடன் தலைமை வகித்து பேசுகையில், “ஒழுக்கம் என்பது முதல் பாடம்; அதை மாணவர்கள் தினம் தினம் கற்க வேண்டும். தினமும் படிக்க வேண்டும்.

கற்ற பாடங்களை திரும்ப திரும்ப எழுதி பார்க்க வேண்டும். தாய் தந்தையரை மதிக்க வேண்டும்.ஆசிரியரின் அறிவுரைப்படி நடக்க வேண்டும். தினமும் கடவுளை ஐந்து நிமிடம் நினைக்க வேண்டும்,” என்றார்.

முன்னதாக மெட்ரிக் பள்ளி மாணவி சஞ்சனி வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா சிறப்புரையாற்றினார். பின்னர், எஸ் பி.கே., ஜெம்ஸ் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற

எம்.சி.ஆர்., குரூப்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.சி. ராபின், ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சேர்மன் வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சேர்மன் பிரபு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். மாணவி ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us