UPDATED : மார் 18, 2026 05:16 PM
ADDED : மார் 18, 2026 05:19 PM

திருக்கோவிலுார்:
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியின் 26வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
ஒலிம்பிக் தீபத்தை கல்லுாரி மாணவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கல்லுாரி துணைத் தலைவர் முஸ்டாக் அகமது ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு விளையாட்டு உறுதி மொழியை செய்து வைத்தார்.
கல்லுாரி தலைவர் செல்வராஜ் ஒலிம்பிக் கொடியையும், செயலாளர் ஏழுமலை தேசிய கொடியையும், தாளாளர் பழனிராஜ் கல்லுாரி கொடியையும் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
மாலையில் நடந்த ஆண்டு விழாவிற்கு கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை, பொருளாதார சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பட்டிமன்ற பேச்சாளர் எழிலரசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
சப் கலெக்டர் ஆனந்த் குமார்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தாளாளர் பழனிராஜ், இணை செயலாளர் சத்யநாராயணன் உள்ளிட்ட கல்லுாரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி, உடற்கல்வி இயக்குனர்கள் குமரகுரு, கெவின் செய்திருந்தனர்.

