UPDATED : மே 13, 2024 12:00 AM
ADDED : மே 13, 2024 09:18 AM

சென்னை:
இளநிலை பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்காக, ஆன்லைன் வாயிலாக, ஒரு லட்சத்து, 699 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்புகளில் உள்ள, 1.50 லட்சம் இடங்கள், பொது கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன. நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, ஆன்லைன் வாயிலாக ஆகஸ்டில் நடத்த, தொழிற்நுட்ப கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 6 ம்தேதி முதல், www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நேற்று வரை, ஒரு லட்சத்து, 699 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 56,044 பேர், அதற்குரிய கட்டணம் செலுத்தியுள்ளனர். சான்றிதழ்களை, 27,755 பேர் பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பிக்க, ஜூன் 6ம் தேதி கடைசி நாள்.