டி.என்.இ.ஏ.,: 100 சதவீத இடங்கள் நிரம்பிய 29 இன்ஜி., கல்லூரிகள்!
டி.என்.இ.ஏ.,: 100 சதவீத இடங்கள் நிரம்பிய 29 இன்ஜி., கல்லூரிகள்!
UPDATED : செப் 08, 2024 12:00 AM
ADDED : செப் 08, 2024 10:40 PM

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 29 இன்ஜி., கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. அடுத்ததாக துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லுரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சிறப்பு மற்றும் பொது கலந்தாய்வு சமீபத்தில் நிறைவடைந்துள்ளன. அதில், மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 93 ஆயிரம் இடங்களில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. சுமார் 72 ஆயிரம் இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
மேலும், 81 கல்லூரிகளில் 95 சதவீதத்திற்கு அதிகமான இடங்களும், 109 கல்லூரிகளில் 90 சதவீதத்திற்கு அதிகமான இடங்களும், 149 கல்லூரிகளில் 80 சதவீதத்திற்கு அதிகமான இடங்களும், 172 கல்லூரிகளில் 75 சதவீதத்திற்கு அதிகமான இடங்களும் நிரம்பியுள்ளன. 52 கல்லூரிகளில் 10 சதவிதத்திற்கும் குறைவான இடங்களும், 12 கல்லூரிகளில் ஒரு சதவீதத்திற்கு குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 7 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை.
இந்நிலையில், துணை கலந்தாய்வுக்கு பிறகு 100 சதவீதம் நிரம்பாத முதன்மை வரிசையில் உள்ள கல்லூரிகளில் இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ள கல்லூரிகளின் பட்டியல்:
1. அண்ணா பல்கலைக்கழகம் - ஏ.சி.டி., சென்னை
2. அண்ணா பல்கலைக்கழகம் - சி.இ.ஜி., சென்னை
3. அண்ணா பல்கலைக்கழகம் - எம்.ஐ.டி., சென்னை
4. அண்ணா பல்கலைக்கழகம் - எஸ்.ஏ.பி., சென்னை
5. அண்ணா பல்கைலைக்கழகம், கோவை மண்டல வளாகம்
6. அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மண்டல வளாகம்
7. அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, காரைக்குடி
8. சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - சிக்ரி, காரைக்குடி
9. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - சி.ஐ.டி., கோவை
10. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை
11. சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி - சிபெட், சென்னை
12 .இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம், சேலம்
13. அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
14. அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு
15. அரசு பொறியியல் கல்லூரி, கிருஷ்ணகிரி
16. அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
17. அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
18. அரசு பொறியியல் கல்லூரி, தர்மபுரி
19. கற்பகம் பொறியியல் கல்லூரி, கோவை
20. கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை
21. பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோவை
22. பி.எஸ்.ஜி., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி அண்டு அப்ளைடு ரிசர்ச், கோவை
23. ரத்னம் கல்லூரி, கோவை
24. எஸ்.எஸ்.என்., கல்லூரி, சென்னை
25. ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, கோவை
26. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோவை
27. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
28. வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரி, கோவை
29. வி.எஸ்.பி., பொறியியல் கல்லூரி, கரூர்