டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கூடுதல் பணியிடம் சேர்ப்பு
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கூடுதல் பணியிடம் சேர்ப்பு
UPDATED : ஜூன் 12, 2025 12:00 AM
ADDED : ஜூன் 12, 2025 07:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாடு அரசு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 615 இடங்களை நிரப்ப, கடந்த மாதம் 21ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு விண்ணப்பிக்க, வரும் 25ம் தேதி கடைசி நாள்.
தேர்வுகள் ஆக., 4 முதல் 10ம் தேதி வரை நடக்க உள்ளன. இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள், உதவி பொறியாளர், இளநிலை திட்ட அமைப்பாளர், வேளாண் அலுவலர், மீன்வள ஆய்வாளர், சுற்றுச்சூழல் அறிவியலாளர், கணினி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், கூடுதலாக 418 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு https://www.tnpsc.gov.in/ இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

