தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு

டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு


UPDATED : செப் 20, 2026 01:45 PM

ADDED : செப் 20, 2026 01:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2026 01:45 PM ADDED : செப் 20, 2026 01:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வு (ஓ.எம்.ஆர்., தேர்வு) செப்., 19ல் நடந்தது.

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி, வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி, இ.எஸ்.,கலை அறிவியல் கல்லுாரி, சாலாமேடு டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை அறிவியல் கல்லுாரி, வி.மருதுார் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, எம்.ஆர்.கே., தெரு ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளி (சில்வர் ஜூப்ளி) ஆகிய மையங்களில் நடந்தது.

காலை 09:30 மணிக்கு துவங்கிய தேர்வு மதியம் 12:30 மணி வரை நடந்தது. தேர்வை 2,135 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 1,631 பேர் தேர்வெழுத வரவில்லை. அதே போல், விவரித்து எழுதும் தேர்வு மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடந்தது.

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மட்டும் நடந்த இந்த தேர்வை 6 பேர் மட்டுமே எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் 8 பேர் வரவில்லை. இந்த தேர்வை ஆசிரியர்கள், அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us