தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு; நுாலகத்தில் பயிற்சி வகுப்பு துவக்கம்

டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு; நுாலகத்தில் பயிற்சி வகுப்பு துவக்கம்

டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு; நுாலகத்தில் பயிற்சி வகுப்பு துவக்கம்


UPDATED : நவ 03, 2026 03:10 PM

ADDED : நவ 03, 2026 03:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 03:10 PM ADDED : நவ 03, 2026 03:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கள் வால்பாறை நுாலகத்தில் துவங்கியது.

தமிழகத்தில் 6,524 காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வு எழுதலாம்.

வரும், 5 ம் தேதிக்குள் மாணவர்கள் தேர்வு எழுத ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, எந்த வித கட்டணமும் இன்றி, மாவட்ட வேலை வாய்ப்பு துறை வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

வால்பாறை நுாலகத்தில் நடந்த இலவச பயிற்சி வகுப்பிற்கு, நுாலகர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட வேலை வாய்ப்புத்துறை துணை இயக்குனர் கருணாகரன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரபாஸ்கர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மணிகண்டன் ஆகியோர், பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்களை வழங்கினர்.

அதிகாரிகள் பேசியதாவது:

தமிழக அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் படிக்க வசதியாக, மாவட்ட வேலை வாய்ப்பு துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.

வால்பாறை மலைப்பகுதியில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில், நுாலகத்தில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பயிற்சி முகாம் நடக்கிறது.

எளிதில் தேர்வு எழுதும் வகையில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்காக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே, பயிற்சி அளிக்கின்றனர். போட்டித் தேர்வுக்கான நுால்கள் உட்பட அனைத்துமே இலவசமாக வழங்கப்படும்.

மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சிறந்த முறையில் தேர்வு எழுதி அரசு பணிகளில் சேர வேண்டும்.

இவ்வாறு, பேசினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us