UPDATED : செப் 28, 2026 02:10 PM
ADDED : செப் 28, 2026 02:11 PM
சேலம்:
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 'குரூப் - 1, 1ஏ' பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு, தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில், 31 மையங்களில், 44 கூடங்களில், காலை, 09:30 முதல், மதியம், 12:30 மணி வரை தேர்வு நடந்தது. காலை, 08:30க்கு முன்னதாக, தேர்வர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
விண்ணப்பித்த, 12,873 பேரில், 9,806 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இது, 76.17 சதவீதம். 3,067 பேர் வரவில்லை. இது, 23.82 சதவீதம். தேர்வர்கள் வசதிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அத்துடன், 44 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மையங்கள் கண்காணிக்கப்பட்டன.
அனைத்து மையங்களும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சேலம் அரசு கலைக்கல்லுாரி உள்ளிட்ட மையங்களில், கலெக்டர் இளம் பகவத் ஆய்வு செய்தார்.
