தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்சி., குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 காலி பணியிடம் சேர்ப்பு

டி.என்.பி.எஸ்சி., குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 காலி பணியிடம் சேர்ப்பு

டி.என்.பி.எஸ்சி., குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 காலி பணியிடம் சேர்ப்பு


UPDATED : அக் 09, 2024 12:00 AM

ADDED : அக் 09, 2024 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2024 12:00 AM ADDED : அக் 09, 2024 06:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில், கூடுதலாக 2,208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 23 வகையான குரூப் 4 பதவிகளுக்கு, 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ) தேர்வு ஜூன் 9ம் தேதி நடந்தது. 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதினர். செப்., 11ல் கூடுதலாக 480 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன.

கூடுதல் இடங்களை எதிர்பார்த்த தேர்வர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதன் தொடர்ச்சியாக, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வந்தது. இம்மாதம் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், தற்போது குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இதனால் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரித்துள்ளது. இதற்கான விவரங்களை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us