ஜெயிக்கணும்... ஜெயிச்சே ஆகணும்: விண்வெளி வீரர்களுக்கு எனர்ஜி தரும் ராகேஷ் சர்மா
ஜெயிக்கணும்... ஜெயிச்சே ஆகணும்: விண்வெளி வீரர்களுக்கு எனர்ஜி தரும் ராகேஷ் சர்மா
UPDATED : ஆக 13, 2024 12:00 AM
ADDED : ஆக 13, 2024 11:17 AM
பெங்களூரு:
விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதில் பல சவால்கள் உள்ளதாக விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா கூறி உள்ளார்.
முதல் இந்தியர்
பஞ்சாபைச் சேர்ந்த ராகேஷ் சர்மா, போர் விமானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், அசோக சக்ரா விருதையும் வென்றவர். 1984ம் ஆண்டு விண்வெளியில் சல்யூட் 7 என்ற ரஷ்ய விண்கலத்தில் அவர் பயணித்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகின்றன. விண்வெளியில் பயணித்த முதல் இந்தியர் என்ற சாதனை, பெருமைக்கு சொந்தக்காரர்.
அம்சங்கள்
ராகேஷ் சர்மாவின் சாதனைகள் இன்றளவும் போற்றப்பட்டு வரும் நிலையில், விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் எப்படி உருவாகும்? ககன்யான் திட்டத்தில் நாம் பார்க்க வேண்டிய மற்றும் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் என்ன என்பது பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.
விண்வெளி பயணம்
அவர் கூறியிருப்பதாவது:
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்பதை ககன்யான் திட்டத்தின் மூலம் நாம் மீட்டெடுக்கிறோம். விண்வெளி பயணத்தில் வீரர்கள் எப்படி தயாராகின்றனர்? அவர்களின் மனதில் நினைப்பது என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சவால்
ஆரம்ப காலங்களில் விண்வெளி பயணம் எப்படி இருந்தது என்பதை யோசித்து பாருங்கள். வேற்று மொழி பின்பற்றப்படும் ரஷ்யாவில், வித்தியாசமான கால சூழ்நிலையில் நாங்கள் பயிற்சி பெற்றோம். விண்வெளியில் மனிதர்கள் வாழக்கூடிய பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவது என்பது கடினமானது, அதில் பல சவால்கள் உள்ளன, அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
எளிதானதல்ல
ஆனால் அது மிகவும் எளிதான விஷயம் அல்ல. எப்படி நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக ஏராளமான சவால்கள் நம் முன் காத்திருக்கின்றன, அவற்றை நாம் வெற்றிகரமாக கடக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.