UPDATED : ஆக 14, 2025 12:00 AM
ADDED : ஆக 14, 2025 03:48 PM

சென்னை:
நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவர், டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றுள்ளார்.
அகில இந்திய மருத்துவ கலந்தாய்வின் முதல் சுற்றில், இடங்கள் பெற்றவர்களின் விபரங்களை, மத்திய மருத்துவ கமிட்டி, https://mcc.nic.in/ug-medical-counselling/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், நீட் தேர்வில், 720க்கு, 665 பெற்று, திருநெல்வேலியை சேர்ந்த மாணவர் சூர்யநாராயணன், தேசிய அளவில், 27வது இடத்தையும், தமிழக அளவிலும் முதலிடத்தையும் பெற்றிருந்தார்.
இந்த மாணவர், அகில மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று, டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றுள்ளார். நீட் தேர்வில் முதல் 48 இடங்களை பெற்ற மாணவர்கள் அனைவரும் டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்துள்ளனர்.
அதேபோல், அகில இந்திய கலந்தாய்வில், 15 சதவீத ஒதுக்கீட்டில், சென்னை மருத்துவ கல்லுாரி, மதுரை மருத்து வ கல்லுாரி, மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில், பல மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றுள்ளனர்.