தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி சீருடை தையல் கூலியை உயர்த்த தொழிற்சங்கம் கோரிக்கை

பள்ளி சீருடை தையல் கூலியை உயர்த்த தொழிற்சங்கம் கோரிக்கை

பள்ளி சீருடை தையல் கூலியை உயர்த்த தொழிற்சங்கம் கோரிக்கை


UPDATED : ஜூன் 22, 2026 10:46 AM

ADDED : ஜூன் 22, 2026 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2026 10:46 AM ADDED : ஜூன் 22, 2026 10:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ், பள்ளி சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க உறுப்பினர்கள், அரசு தங்களுக்கு வழங்கும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை கீழ், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், மாணவ மாணவியருக்கு, ஆண்டுதோறும் நான்கு ஜோடி இலவச சீருடை வழங்கப்படுகிறது.

இச்சீருடை கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் வாயிலாக நெசவு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்தொழில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, சீருடையாக தைத்து வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில், இந்த பணிகள் தொடங்கி, ஜூன் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படுவது வழக்கம்.

நடப்பாண்டு பள்ளிகள் திறந்து, 20 நாட்களாகியும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை. மே மாதம் இறுதியில் தான், சீருடை தைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 10 நாட்களுக்கு மேலாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க ஊழியர்களுக்கு, ஒரு செட் சீருடைக்கு, 200 ரூபாய் கூலி வழங்குவதாக கூறப்படுகிறது. இந்தத் தொகையில் தான், நூல், பட்டன், ஜிப் உள்ளிட்டவற்றை, தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

தனியார் தையல் நிறுவனங்கள், குறைந்தபட்சம் ஒரு 'செட்' பள்ளி சீருடை தைக்க, 350 முதல், 450 ரூபாய் வரை பெறும் நிலையில், அரசு குறைந்த கூலி வழங்குவது, அவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, தையல் கூலியை, நடைமுறை செலவுகளுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us