விடுமுறை முடிந்து திரும்பிய வாகனங்கள் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
விடுமுறை முடிந்து திரும்பிய வாகனங்கள் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM
ADDED : ஜூன் 02, 2025 10:26 AM
விக்கிரவாண்டி:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பதால், தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்கள் சென்னை நோக்கி சென்றதால், விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அரசு பொதுத் தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் வசிப்பவர்கள் தங்களது பிள்ளைகளை கோடை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
கோடை விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்றவர்களும், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றலா தளங்களுக்கு சென்றவர்கள் நேற்று சென்னை திரும்பினர்.
விழுப்புரம் பகுதியில் சென்னை நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று மாலை 6:00 மணிக்கு பிறகு அதிக வாகனங்கள் சென்னை நோக்கி அணிவகுத்தன.
விக்கிரவாண்டி டோல் பிளாசாவில், சென்னை நோக்கிச் சென்ற வாகனங்களை 8 லேன்களை திறந்து அனுமதித்ததால் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக கடந்து சென்றது.
வார இறுதி நாட்களில் டோல் பிளாசாவில் சராசரியாக 35 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும்.
நேற்று விடுமுறை முடிந்து மக்கள் திரும்பியதால், வழக்கத்தை விட கூடுதலாக 10 ஆயிரம் வாக னங்கள் சேர்த்து, மொத்தம், 45 ஆயிரம் வாகனங்கள் சென்னை நோக்கி சென்றது.