sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

செவ்விலக்கியங்களில் சேயோன் செம்மொழி நிறுவனத்தில் பயிற்சி

/

செவ்விலக்கியங்களில் சேயோன் செம்மொழி நிறுவனத்தில் பயிற்சி

செவ்விலக்கியங்களில் சேயோன் செம்மொழி நிறுவனத்தில் பயிற்சி

செவ்விலக்கியங்களில் சேயோன் செம்மொழி நிறுவனத்தில் பயிற்சி


UPDATED : ஏப் 14, 2024 12:00 AM

ADDED : ஏப் 14, 2024 06:21 PM

Google News

UPDATED : ஏப் 14, 2024 12:00 AM ADDED : ஏப் 14, 2024 06:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமானசெம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில், மே 15 முதல், செவ்விலக்கிய மரபில் சேயோன் என்ற தலைப்பில், ஒரு வார பயிலரங்கம் நடக்க உள்ளது.

இது குறித்து, அதன் இயக்குனர் சந்திரசேகர் கூறியதாவது:


பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். அவர்கள் நில அமைப்புக்கு ஏற்ப தொழில்களையும், தெய்வங்களையும் வழிபட்டனர். அதன்படி, மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய தெய்வங்களை வழிபட்டதாக தொல்காப்பியம் கூறுகிறது.

சேயோன் என்பதை செம்மையானவன், இளமையானவன், தலைவன், அழகன் அல்லது முருகன் என்ற பொருள்களில் அழைத்துள்ளனர்.

அதன் அடிப்படையில், முருகாற்றுப்படை' உள்ளிட்ட நுால்கள் எழுதப்பட்டுள்ளன. முருகன் வழிபாட்டில் வெறியாடுதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அகநானுாறு, புறநானுாறு, பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநுாறு, மலைபடுகடாம் உள்ளிட்ட இலக்கியங்கள் கூறுகின்றன.

இவற்றில் புலமை பெற்ற அறிஞர்கள், தமிழ் செவ்விலக்கிய மரபில் சேயோன்' என்ற ஒரு வார பயிலரங்கை நடத்த உள்ளனர். இதில், பழந்தமிழகத்தில் சேயோன் வழிபாட்டு மரபு குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

விருப்பமுள்ளோர், https://forms.gle/drzR2eJR1aoyGpXr8 என்ற இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மே 2க்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us