UPDATED : ஜூன் 09, 2025 12:00 AM
ADDED : ஜூன் 09, 2025 11:04 AM
கோவை:
2025 - 26 கல்வியாண்டுக்கான திறனாய்வு தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்ட அரசுப்பள்ளிகளில் தொடங்கியுள்ளன.
மாநில பாடத்திட்டத்தில், 2024 - 25ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு முடித்து, தற்போது பிளஸ் 1 படித்து வரும் அரசு பள்ளி மாணவ, மாணவியர் இந்த திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதி பெறுகின்றனர்.
தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு, மாதம் ரூ.1,000 வீதம், ஒரு கல்வியாண்டுக்கு ரூ.10,000ம்,இளநிலை பட்டப்படிப்பு வரைஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இந்த தேர்வில், 9 மற்றும் 10ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் அடிப்படையாககொண்ட கேள்விகள் இடம்பெறும்.
தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், உரிய விண்ணப்பங்களை தங்கள் பள்ளிதலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கலாம்.