ஆதிதிராவிடர், பழங்குடியின 100 மாணவர்களுக்கு பயிற்சி
ஆதிதிராவிடர், பழங்குடியின 100 மாணவர்களுக்கு பயிற்சி
UPDATED : செப் 04, 2024 12:00 AM
ADDED : செப் 04, 2024 08:05 AM
சென்னை:
சென்னையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 100 மாணவர்களுக்கு, தாட்கோ சார்பில், யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தாட்கோ எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், சென்னையில் உள்ள பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றன.
தேர்வு எழுதவுள்ள தகுதியான 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஓராண்டு கால பயிற்சிக்கு, விடுதியிலேயே தங்கி படிக்கலாம்; பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ வழங்கும்.
திட்டத்தில் சேர, www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தெரிவித்தார்.