உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
UPDATED : மே 11, 2024 12:00 AM
ADDED : மே 11, 2024 10:10 AM
மேல்மருவத்துார்:
செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக, உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று முன்தினம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
இந்நிகழ்வை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் முஹம்மத் கலீம், ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி முதல்வர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழிற்சார்ந்த கல்வி பயிலும் வகையில், உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கான ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மதுராந்தகம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், எஸ்.எம்.சி., உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.