sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாரண, சாரணியர் இயக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

சாரண, சாரணியர் இயக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

சாரண, சாரணியர் இயக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி


UPDATED : ஜன 26, 2026 08:54 AM

ADDED : ஜன 26, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2026 08:54 AM ADDED : ஜன 26, 2026 08:54 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த, 19 முதல், 25ம் தேதி வரை, 7 நாட்கள் நடந்தன.

இதில், 45க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மொத்தம், 75க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். பல்வேறு குழுக்களாக ஆசிரியர்கள் பிரிக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மாணவ, மாணவியருக்கு, உணவு பழக்கம், ஒழுக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்து கூறும் வகையில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்து, ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர். நிறைவு நாளான நேற்று, பயிற்சியில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us