காலநிலை மாற்றம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
காலநிலை மாற்றம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
UPDATED : செப் 18, 2026 04:00 PM
ADDED : செப் 18, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
கரூர்:
கரூர், வெண்ணைமலை பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றத்துறை சார்பில், பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜு தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, 80 அரசு, அரசு உதவி பெறும், தனியார் ஆசிரியர்களுக்கு, 15ம் தேதி முதல் மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு பயிற்சி நேரடியாகவும் மற்றும் களப்
பயணம் அழைத்துச் செல்லப்பட்டும் வழங்கப்பட்டன. பயிற்சியை காலநிலை மாற்றத்துறையின் வல்லுநர்கள் எழில், ஏஞ்சலினா மனோ, அனிதா, கார்முகில், கணேஷ்வர் ஆகியோர் வழங்கினர்.
