தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடல் ஆமை பிரேத பரிசோதனை கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி

கடல் ஆமை பிரேத பரிசோதனை கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி

கடல் ஆமை பிரேத பரிசோதனை கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி


UPDATED : ஜன 08, 2026 03:50 PM

ADDED : ஜன 08, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2026 03:50 PM ADDED : ஜன 08, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வண்டலுார்:
வண்டலுாரில் இயங்கி வரும் வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் சார்பில், உயிரிழந்த கடல் ஆமைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்வது குறித்த பயிற்சி, நேற்று நடத்தப்பட்டது.

வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், தமிழக அரசின் வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, தமிழக காடுகள், மலைகள், கடல் உள்ளிட்ட இயற்கை வளங்களில் வாழும் உயிரினங்கள் இறந்தால், அவற்றின் உடலை பிரேத பரிசோதனை செய்து, இறப்பிற்கான காரணம் கண்டறியப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பணியாற்றும் கள கால்நடை மருத்துவர்களுக்கு, கடல் ஆமையை கையாளுதல் மற்றும் உடற்கூறு பரிசோதனை செய்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி, நேற்று நடத்தப்பட்டது. இதில், தமிழக கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 17 கால்நடை மருத்துவர்கள் பங்கேற்றனர்.

கடலிலிருந்து கரை ஒதுங்கி மரணமடையும் ஆமைகளின் உடலை திறம்பட கையாளுதல் மற்றும் அவற்றின் மரணத்திற்கான காரணம் கண்டறிதல் குறித்து, இம்முகாமில் செயல் முறை பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us