UPDATED : அக் 25, 2024 12:00 AM
ADDED : அக் 25, 2024 09:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவையிலுள்ள ஜூடிசியல் அகாடமியில், நீதிபதிகளுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது.
கோவை, ரேஸ்கோர்சில் செயல்படும் மாநில நீதித்துறை மண்டல பயிற்சி மையத்தில், ஐந்து மாநில நீதிபதிகளுக்கான பயிற்சி முகாம், வரும் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைசேர்ந்த, மாவட்ட நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி முகாமில், சுப்ரீம் கோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.