sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இரு ஓட்டுச்சாவடிகள் வேறு பள்ளிக்கு மாற்றம்

/

இரு ஓட்டுச்சாவடிகள் வேறு பள்ளிக்கு மாற்றம்

இரு ஓட்டுச்சாவடிகள் வேறு பள்ளிக்கு மாற்றம்

இரு ஓட்டுச்சாவடிகள் வேறு பள்ளிக்கு மாற்றம்


UPDATED : ஏப் 13, 2024 12:00 AM

ADDED : ஏப் 13, 2024 10:14 AM

Google News

UPDATED : ஏப் 13, 2024 12:00 AM ADDED : ஏப் 13, 2024 10:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 706 இடங்களில், 1,701 ஓட்டுச்சாவடிகள் அமைக்க, பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. அதில், நகர்ப்பகுதியில் 821, புறநகரில் 880 ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதில், கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், பிருந்தாவன் வித்யாலயா மழலையர் பள்ளி உள்ளது; இங்கு பாகம் எண்: 140, 141 ஆகிய இரண்டு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இப்பள்ளி, பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜனுக்கு சொந்தமானது.

இதுதொடர்பாக, பல்வேறு கட்சிகளில் இருந்து புகார் வந்ததை தொடர்ந்து, அங்கு அமைந்திருந்த ஓட்டுச்சாவடிகளை, போத்தனுார் ரயில்வே பள்ளிக்கு மாற்றம் செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, பாக எண்: 140, 141ஐ சேர்ந்த வாக்காளர்கள், புதிய ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வேண்டுமென, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us