தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உருமாறும் இந்தியா மாநாடு: ஒலிம்பிக், கிரிக்கெட், விண்வெளி வீரர்கள் பங்கேற்பு

உருமாறும் இந்தியா மாநாடு: ஒலிம்பிக், கிரிக்கெட், விண்வெளி வீரர்கள் பங்கேற்பு

உருமாறும் இந்தியா மாநாடு: ஒலிம்பிக், கிரிக்கெட், விண்வெளி வீரர்கள் பங்கேற்பு


UPDATED : செப் 02, 2026 10:13 AM

ADDED : செப் 02, 2026 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2026 10:13 AM ADDED : செப் 02, 2026 10:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
கோவை, வெள்ளலுார் எஸ்.எஸ்.வி.எம்., வேர்ல்டு பள்ளியில், 'உருமாறும் இந்தியா' மாநாட்டின் 5வது பதிப்பு, 'எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்' என்ற தலைப்பில் நடந்தது.

எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை, அறங்காவலர் மோகன்தாஸ், இயக்குநர்கள் ஸ்ரீஷா, நிதின் ஜெய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

'ககன்யான்' திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவரான, ஏர் கமடோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், பரதநாட்டிய கலைஞர் ருக்மணி ஆகியோர் மாணவர்களிடம் உரையாற்றி, அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

கிரிக்கெட் வீரரும், சி.எஸ்.கே., அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், “பேட்டை நோக்கி வரும் பந்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தில் நடந்தவற்றையோ, எதிர்காலத்தில் நடக்கப்போவதையோ நினைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. பிறரிடம் நம்மை நிரூபிப்பதைவிட, நமக்கு நாமே உண்மையாகவும் , உழைப்புடனும் இருப்பதே முக்கியம்,” என்றார்.

கல்வி மற்றும் கற்பித்தல் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 13 கல்வியாளர்களுக்கு 'இன்ஸ்பிரேஷனல் குரு' விருதுகள் வழங்கப்பட்டன.

குருகிராம் ஸ்காட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் அத்விக், ஓசூர் தி அசோக் லேலண்ட் பள்ளி மாணவியர் ஸ்ருதிகா, ரக்சிதா, சென்னை பப்ளிக் பள்ளி மாணவி மெர்சி இளவேனி ஆகியோருக்கும் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

'கடின உழைப்பு'


ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா பேசுகையில், “வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள துணிச்சலும், சுயநம்பிக்கையும் அவசியம். 2000 சிட்னி ஒலிம்பிக்கில், 17 வயதில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தகுதிச்சுற்றில் ஒலிம்பிக் சாதனை படைத்த போதும், இறுதிச்சுற்றில் தோல்வியடைந்து பதக்கத்தை தவறவிட்டேன்.

அந்த தோல்விக்குப் பின், முடிவை மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், செயல்முறையில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். எனக்கு வெற்றியைத் தந்தது கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான்,” என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us