UPDATED : ஆக 05, 2026 04:36 PM
ADDED : ஆக 05, 2026 04:37 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில், வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம் பிரிவில் வணிக ரீதியாக மர வளர்ப்பு பயிற்சி வரும் 13ம் தேதி நடக்க உள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, வணிக மர வளர்ப்பின் முக்கியத்துவம், அடிப்படைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள், வணிக மர வகைகளைத் தேர்ந்தெடுக்கும் முறைகள், தரமான நாற்று உற்பத்தி, நிலத் தயாரிப்பு மற்றும் நடவு முறைகள் உரமிடுதல், நீர்ப்பாசன மேலாண்மை மற்றும் பூச்சி நோய் மேலாண்மை கவாத்து செய்தல், கிளை வெட்டுதல், மர பராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 74184 70345, 94877 12210 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
