பழங்குடியின மாணவர்கள் பள்ளி விடுதியில் இருந்து மாயம்
பழங்குடியின மாணவர்கள் பள்ளி விடுதியில் இருந்து மாயம்
UPDATED : ஜூன் 18, 2025 12:00 AM
ADDED : ஜூன் 18, 2025 08:21 AM
 வால்பாறை: 
கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில், 150 பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.
இப்பள்ளியில் சேத்துமடை நாகரூத்து செட்டில்மென்ட் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சபரி, 15; எட்டாம் வகுப்பு படிக்கும் சுபாஷ், 14, ஆகியோர் நேற்று முன்தினம் காலை யாரிடமும் சொல்லாமல், பள்ளியின் பின்பக்கம் வழியாக வெளியேறியுள்ளனர்.
மாயமான மாணவர்கள், பெற்றோரை சந்திக்க வீட்டிற்கும் செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவர்களின் பெற்றோர், வால்பாறை போலீசில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மாயமான மாணவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, மாயமான மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் நேற்றும் பல்வேறு இடங்களில் தனித்தனி குழுவாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வால்பாறையில் கனமழை பெய்யும் நிலையில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் அச்சத்துடன் தேடி வருகின்றனர்.

