தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செட் தேர்வு நடத்தும் வசதிகள் டி.ஆர்.பி.,யிடம் உள்ளன: அமைச்சர்

செட் தேர்வு நடத்தும் வசதிகள் டி.ஆர்.பி.,யிடம் உள்ளன: அமைச்சர்

செட் தேர்வு நடத்தும் வசதிகள் டி.ஆர்.பி.,யிடம் உள்ளன: அமைச்சர்


UPDATED : டிச 26, 2024 12:00 AM

ADDED : டிச 26, 2024 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 26, 2024 12:00 AM ADDED : டிச 26, 2024 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மாநில தகுதி தேர்வான, செட் நடத்தும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது என, உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

கல்லுாரி உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக, மாநில அரசு நடத்தும் செட் தேர்வை, பல்கலைகள் நடத்தி வந்தன.

தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததுடன், செட் தேர்வை நடத்துவதற்கான, உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இல்லை என தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளித்து, அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை:


ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அரசு பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்வது, கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக செயல்படுகிறது. இது, கடந்த 2011 முதல் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தும் நிறுவனமாக செயல்பட்டு, தேர்வுகளை நடத்துகிறது.

கடந்தாண்டு மறுசீரமைக்கப்பட்டு, தமிழக அரசின் பல்வேறு கல்வி நிறுவனங்கள், பல்கலை ஆசிரியர் பணியாளர்களை தேர்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 1988 முதல் இதுவரை, ஒரு லட்சத்து, 68,657 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்துள்ளது.

தற்போது, தமிழக அரசால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக, மாநில தகுதி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, உயர் கல்வி துறை, பல்கலை பாட வல்லுனர்கள், பேராசிரியர்களை ஈடுபடுத்தி, யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு உட்பட்டு, செட் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வை நடத்த தேவையான நிர்வாக, உள்கட்டமைப்பு வசதிகள், டி.ஆர்.பி.,யிடம் உள்ளன. இது, தமிழக மின்னாளுமை நிறுவனத்துடன் இணைந்து இணையவழி தேர்வு நடத்தவும், நேரடி தேர்வு நடத்தவும் போதுமான வசதிகளை கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us