உண்மையான சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
உண்மையான சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM
ADDED : ஜூன் 17, 2024 10:17 AM

சென்னை:
உண்மையான சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் மற்றும் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தியவர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
சுதந்திர போராட்ட தலைவர்கள் ஜாதி தலைவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். மொழியாலும், மாநிலத்தாலும் பிரிந்து உள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
வரலாறு
உண்மையான சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாற்றை நாம் வெளிக்கொண்டு வர வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு முதலில் அறியப்படாத 100 சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி ஆராய வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் பெரிதளவில் தங்கள் பங்கை அளித்துள்ளார்கள்.
சந்தோசம்
அதற்கு, மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் முன் வந்து மிக சிறப்பாக சேவையை செய்துள்ளார்கள். இந்த எண்ணம் தொடர வேண்டும். சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த வீரர்களின் வேர்வையாலும், ரத்தத்தாலும் தான் நாம் இப்போது நன்கு சந்தோசமாக வாழ்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.