ஒரே நாளில் இரண்டு போட்டித் தேர்வுகள் தேர்வர்கள் குழப்பம்
ஒரே நாளில் இரண்டு போட்டித் தேர்வுகள் தேர்வர்கள் குழப்பம்
UPDATED : டிச 17, 2025 07:49 AM
ADDED : டிச 17, 2025 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்:
தமிழகத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு டிச.21ல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் போலீஸ் எஸ்.ஐ., பணியிடங்களுக்கான தேர்வும் நடக்கிறது. பல தேர்வர்கள் இரண்டு தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளதால் குழப்பத்தில் உள்ளனர். எனவே கிராம நிர்வாக உதவியாளர் தேர்வை வேறு தேதியில் வைக்க வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கலெக்டர் பிரவீன்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

