தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு

தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு

தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : நவ 13, 2026 01:42 PM

ADDED : நவ 13, 2026 01:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 01:42 PM ADDED : நவ 13, 2026 01:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி:
தமிழக அளவில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதில் தட்டச்சு இளநிலை ஆங்கிலத்தில் 69.66 சதவீதம், இளநிலை தமிழில் 76.66 சதவீதம், முதுநிலை ஆங்கிலத்தில் 60.78 சதவீதம், முதுநிலை தமிழில் 65.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

சுருக்கெழுத்து இளநிலை ஆங்கிலத்தில் 14.92 சதவீதம், இளநிலை தமிழில் 60.85 சதவீதம், இடைநிலை ஆங்கிலத்தில் 27.68 சதவீதம், முதுநிலை ஆங்கிலத்தில் 35.98 சதவீதம், முதுநிலை தமிழில் 61.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆண்டுதோறும் சுருக்கெழுத்து தேர்வுக்கான தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.

சுருக்கெழுத்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 2 ஆண்டுகளாக நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு கணினி மூலம் சுருக்கெழுத்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. எவ்வித குளறுபடியும் இல்லாத நிலை உள்ளது. பலர் அரசு அங்கீகாரம் பெற்ற சுருக்கெழுத்து பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிலாமல் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுவதால் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us