தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யு.ஜி.சி.,யிடம் போலி ஆவணம்; தனியார் பல்கலைக்கு எச்சரிக்கை

யு.ஜி.சி.,யிடம் போலி ஆவணம்; தனியார் பல்கலைக்கு எச்சரிக்கை

யு.ஜி.சி.,யிடம் போலி ஆவணம்; தனியார் பல்கலைக்கு எச்சரிக்கை


UPDATED : பிப் 01, 2026 10:20 PM

ADDED : பிப் 01, 2026 10:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2026 10:20 PM ADDED : பிப் 01, 2026 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலாளர் ஷியாம் ராத் வெளியிட்டுள்ள அறிக்கை:


திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயிலில், டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிகர்நிலை பல்கலை இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம், 2025 - 26ம் ஆண்டுக்கான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் நீட்டிப்பு கடிதத்தை போலியாக உருவாக்கி, ஆன்லைன் வழி பி.பி.ஏ., பி.சி.ஏ., படிப்புகள் நடத்த ஒப்புதல் பெற, பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யை நாடியுள்ளது.

ஆன்லைன் வழியாக பி.பி.ஏ., பி.சி.ஏ., படிப்புகளை நடத்த கல்வி நிறுவனத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை.

யு.ஜி.சி.,யிடம் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பது தவறானது மற்றும் மோசடிக்கு சமம். இது ஏ.ஐ.சி.டி.இ., விதிக்கு எதிரானது மட்டும் தண்டனை கூறியது.

எனவே டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் அங்கீகாரம் அற்ற பி.பி.ஏ., மற்றும் பி.சி.ஏ., பாடங்களில் மாணவர்கள் சேர வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us