UPDATED : ஆக 02, 2024 12:00 AM
ADDED : ஆக 02, 2024 06:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
யுஜிசி நெட் தேர்வு ஆக.,21 முதல் செப்.,4 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூன் 18 ம் தேதி யுஜிசி நெட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இந்த தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் இந்த தேர்வானது ஆக.,21 முதல் செப்., 4 வரை நடக்கும் எனவும், காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மதியம் 3 மணி முதுல் மாலை 6 மணி வரையிலும் 2 பிரிவாக நடக்கும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு நடக்கும் மையம் தொடர்பாக, இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தகவல்களுக்கு என்டிஏ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.