தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ யு.ஜி.சி. நெட் தேர்வு முறைகேடு: விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,

யு.ஜி.சி. நெட் தேர்வு முறைகேடு: விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,

யு.ஜி.சி. நெட் தேர்வு முறைகேடு: விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,


UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM

ADDED : ஜூன் 21, 2024 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2024 12:00 AM ADDED : ஜூன் 21, 2024 12:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
யு.ஜி.சி., நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையை துவக்கியுள்ளது.
நாட்டின் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்க, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை சார்பில், யு.ஜி.சி., நெட் தேர்வு நாடு முழுதும் கடந்த 18ம் தேதி நடந்தது. ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் யு.ஜி.சி. நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தது. இந்த விவகாரத்தி்ல் நடந்துள்ள முறைகேடு குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ., எப்.ஐ.ஆர்., வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us