UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM
ADDED : ஜூன் 14, 2024 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பராமரிப்பு பணி அவசர கதியில் கடந்த வாரம் துவங்கியது. வகுப்பறை மேற்கூரை பூச்சு பணி முழுமையாக முடிவடையவில்லை.
இதனால், பள்ளிக்கு வந்த ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில் அமர வைக்கப்பட்டனர். வகுப்புகள் நடக்கவில்லை.
பெற்றோர் சிலர் கூறுகையில், ஏப்., முதல், துவங்கி, 45 நாள் கோடை விடுமுறை விடப்பட்டது. பள்ளிகளை தயார் படுத்த வேண்டுமென இரண்டு முறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு முன்பே பணிகளை முடித்திருக்க வேண்டும். கட்டுமான பணி தாமதம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். தற்காலிக ஏற்பாடாக மாணவ, மாணவியர் வேறு வகுப்புகளில் அமர வைக்கப்பட வேண்டும் என்றனர்.

