தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு


UPDATED : மே 18, 2026 10:46 PM

ADDED : மே 18, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 10:46 PM ADDED : மே 18, 2026 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்:
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் செய்திக்குறிப்பு:


கடலுார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து மார்ச் 31 முடிய அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொருத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் டிகிரி முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கடலுார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுபவராக இருந்தால் விண்ணப்பிக்க வேண்டாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேரில் ஆஜராகி இம்மாதம் 25க்குள் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us