வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
UPDATED : பிப் 08, 2026 07:38 PM
ADDED : பிப் 08, 2026 07:40 PM

கோவை:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை கிடைக்காத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு, மாதந்தோறும் 200 - 1,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இதில், ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருந்தால், 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 5 ஆண்டுகள் தொடர்ந்து பதிவு புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு இல்லாததோடு, ஓராண்டு பதிவு முடித்திருந்தால் போதும். தகுதி இருப்பவர்கள், http://employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்திலோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளது.

